வளரும் இந்தியாவின் தென்பகுதியின் வறண்ட பூமியாகிய ராமநாதபுர மாவட்டம் கமுதி தாலுகாவில் அமைந்துள்ள அபிராமம் என்னும் புகழ் பெற்ற ஊரின் பெயர் கொண்டு ஆரம்பிக்கப்பட்டு தொலைநோக்கு பார்வையில் உருவானது அபிராமம் அறக்கட்டளை.கடந்த கால அனுபவங்கள் மற்றும் நிகழ்கால நிகழ்வுகளை கருத்தில் கொண்டு எதிர்காலத்தை எதிர்கொள்ள நல்ல திறன் மேம்பாட்டை வளர்க்கும் கல்வி நிறுவனத்தை முதன் முதலில் அபிராமம் நகரிலே ஆரம்பித்து அபிராமம் மற்றும் சுற்றுப்புற கிராம மாணவ மாணவிகள் பயன்பெற அமைக்கப்பெற்றது தான் அபிராமம் அறக்கட்டளை. இந்த அறக்கட்டளையின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட கல்வி நிறுவனம் A . T Institute of Allied Health and Paramedics
சிறந்த ஆரம்பமாக எதிர்காலத்திற்கு உகந்த மருத்துவ, துணை மருத்துவ (Paramedical )மற்றும் சுகாதாரம் சார்ந்த (Health Care ) கல்விக்காக பல பிரிவுகளைக்கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தால் நிறுவப்பட்டு திறன் மேம்பாட்டை அனைத்து துறைகளிலும் வளர்க்க NSDC நிறுவனம் (National Skill Development Corporation) பல ஆண்டுகளாக தேசிய அளவில் உதவிவருகிறது. அதன் கீழ் அனுமதி பெற்ற Apollo Medskills (அப்போலோ திறன் மேம்பாட்டு நிறுவனம் ) உடன் இணைந்து A . T Institute of Allied Health and Paramedics ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் நமது மாணவ மாணவிகளுக்கு பயன் அளிக்கும் வகையிலும் பல முக்கிய துறைகளிலும் (திறன்மேம்பாடு மற்றும் கல்லூரி) தடம்பதிக்க எண்ணியுள்ளோம் குறிப்பாக
01 Agriculture – Micro Irrigation (நுண்ணுயிர் பாசனம் ), Water Management (நீர் மேலாண்மை ), Horticulture தோட்டக்கலை
02 Solar Power (சூரியஒளி மின்சாரம்)
03 Artificial Intelligence (செயற்கை நுண்ணறிவு)
மேற்படி துறையின் வல்லுனர்களைக் கொண்டு முன்னோடி நிறுவனங்களின் துணையுடன் மிகவும் ஆழமாக, செய்முறை அதிகமாக பயன்படுத்தப்பட்டு, நேர்த்தியாக தக்க வசதியுடன் வேலை வாய்ப்பை (Job Oriented) முக்கிய அம்சமாக கொண்டு நமது அணைத்து செயல்பாடுகளும் இயங்கும்.
சுற்றுப்புற பின்தங்கிய மாணவ மாணவியர்களுக்கு வேலை வாய்ப்புடன் ஒரு தொழில் கல்வியை தேசிய மற்றும் சர்வதேச வேலை வாய்ப்புக்கான தரத்துடன் அவர்களின் திறமையை அறிந்து அதனை மேம்படுத்தும் நிறுவனமாக Abiramam டிரஸ்ட் இயங்கும், அவர்களின் வேலை வாய்ப்புகளை பெற்றிட உறுதுணையாக நிறுவனம் விளங்கும்.
A.T.IAHP ஒரு வளமான கல்வி உள்கட்டமைப்பு மற்றும் அபிராமம். ராமநாதபுர மாவட்டத்தில் ஒரு உண்மையான ஆக்கபூர்வமான மற்றும் நவீன சூழலைக் கொண்டுள்ளது.
எங்களது வகுப்பறைகள் நன்கு காற்றோட்டம் மற்றும் குளிர்சாதன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது
ATIAHP (ATI) அதிநவீன நிலை மற்றும் முழுமையாக பொருத்தப்பட்ட தானியங்கி ஆய்வகங்களைக் கொண்டுள்ளது, இந்திய மற்றும் சர்வதேச தரத்திற்கு இணையாகவுள்ளது.
விசாலமான நூலகம் அனைத்து அத்தியாவசிய மற்றும் துணை புத்தகங்கள், தொடர்புடைய இதழ்கள், மற்ற வாசிப்பு பொருட்கள் கொண்டுள்ளது
எங்கள் நிறுவனம் நன்கு அனுபவம் வாய்ந்த மற்றும் நன்கு அறியப்பட்ட தொழில் ஆலோசகர் தொழில் தேர்வு, முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கான தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் நிபுணர் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குகிறது.
எங்கள் சிற்றேட்டை பதிவிறக்கம் செய்யவும்